தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மின்தூக்கியில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு! - ஹைதராபாத்

ஹைதராபாத் : மின்தூக்கியில் தவறி விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

hyderabad

By

Published : Apr 20, 2019, 12:14 PM IST

ஹைதராபாத்தில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் துப்புரவு தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார் ரேகா(45). இவர் தனியார் கட்டடம் ஒன்றின் 5ஆவது மாடியிலிருந்து கீழே வருவதற்காக மின்தூக்கியை பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், லிப்ட் வருவதற்கு முன்பாகவே அதன் க்ரில் கேட்டை திறந்து அதில் தவறி விழுந்தார்.

இதனையடுத்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், ரேகாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு மின்தூக்கியை சரிவர பராமரிக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து விடுதி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details