தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பூட்டியிருந்த வீட்டில் தாய் - மகள் சடலம்! - Woman daughter found dead in UP Barabanki

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி அருகே பூட்டியிருந்த வீட்டில்  தாய், மகள் இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பூட்டியிருந்த வீட்டில் தாய்-மகள் சடலம்!
பூட்டியிருந்த வீட்டில் தாய்-மகள் சடலம்!

By

Published : Jun 16, 2020, 7:57 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் சுபேஹா காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குக் கீழ் வரும் பகுதியில், பூட்டிய வீட்டிற்குள் பெண் ஒருவர் தனது பிள்ளைகளுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக, காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், வீட்டிற்குள் இறந்து கிடந்த தாய், மகள் இருவரது உடல்களை மீட்டனர். மேலும், காயமடைந்து கிடந்த மற்றொரு மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக, பராபங்கி காவல்துறைக் கண்காணிப்பாளர் அரவிந்த் சதுர்வேதி கூறுகையில், ”விசாரணையில், இறந்த பெண்ணின் கணவர் குவைத்தில் பணிபுரிவது தெரிய வந்துள்ளது. கடந்த இருபது நாள்களுக்கு முன்பு இந்தப் பெண், தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டிலிருந்து இங்கு வந்துள்ளார். நேற்று முன் தினம் இவர்கள் அனைவரும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு இரவு விருந்திற்கு சென்று வந்ததுள்ளனர்.

பூட்டியிருந்த வீட்டில் தாய்-மகள் சடலம்!

மேலும், உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த வீட்டில் இவர்களுக்குத் தெரிந்த யாரேனும் சென்று, தாக்கி கொலை செய்திருக்கலாம் என்கின்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க :கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின சிறுவன்: சுட்டுக்கொன்ற சாதிவெறியர்கள்

ABOUT THE AUTHOR

...view details