தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் வரதட்சணை கேட்டு இளம் பெண் மீது தீ வைத்த துயரம்! - உத்தரப் பிரதேசம் வரதட்சனை கொடுமை

லக்னோ: வரதட்சணை கேட்டு இளம் பெண் மீது தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

woman burnt alive  dowry  Uttar Pradesh news  woman burnt over dowry  வரதட்சனை கொடுமை  உத்தரப் பிரதேசம் வரதட்சனை கொடுமை  வரதட்சனை கேட்டு இளம் பெண் எரிப்பு
woman burnt over dowry

By

Published : May 27, 2020, 12:04 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நேஹா. இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசாத் திவாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் ஆன நாள் முதல் ஆசாத் திவாரியும் அவரது தாயும் நேஹாவிடம் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் (மே 26) இரவு வழக்கம் போல் நேஹாவிடம் கணவர், மாமியார் இருவரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி கயிற்றால் கட்டிபோட்டு அவர் மீது தீ வைத்து அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

அதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல் துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆசாத்தையும், அவரது தாயையும் வலை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தீக்குளிப்பு!

ABOUT THE AUTHOR

...view details