அமெரிக்க ராணுவ அகாதமியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அன்மோல் நரங் என்ற சீக்கிய பெண் பட்டம்பெற்று சாதனை படைத்துள்ளார். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க ராணுவ அகாதமியில் பட்டம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து அன்மோல் நரங் கூறுகையில், ”அமெரிக்க ராணுவ அகாதமியில் நான் பட்டம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது கனவு நிறைவேறியதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றார்.
இவர் விரைவில் ஜப்பான் நாட்டில் மிக முக்கியப் பணியில் சேரவுள்ளார். அன்மோல் நரங் தற்போது ஜார்ஜியாவில் வசிக்கிறார். இருப்பினும், இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவர். இவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். இதன் காரணமாகவே இவருக்கும், சிறுவயது முதலே ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று எண்ணம் வந்துள்ளது. அந்த எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மருத்துவராக விரும்பி உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த சாதனைப் பெண்!