தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடும்பப் பிரச்னை - மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்! - இளம்பெண் அடித்துக்கொலை

புவனேஷ்வர்: குடும்பப் பிரச்னை தெடார்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது தாய், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து தனது மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பப் பிரச்னையினால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்
குடும்பப் பிரச்னையினால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்

By

Published : Mar 13, 2020, 7:22 AM IST

ஓடிசா மாநிலம் பாண்டபாடா பகுதியில் வசித்து வந்த ஜுவாங்(30) என்பவருக்கும், அவரது கணவர் ராயா ஜுவாங்(35)க்கும் வீட்டுப் பிரச்னை தொடர்பாக கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. அப்போது ராயா ஜுவாங், தனது தாய், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து தனது மனைவியைத் தாக்கியுள்ளார்.

இரக்கமற்ற முறையில் கட்டையை வைத்து தாக்கியதில் பெங்கா ஜுவாங் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து ராயா ஜுவாங், அவரது தாய், குடும்ப உறுப்பினர்கள் சிலரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மண் சரிந்து கல்குவாரி தொழிலாளி பலி

ABOUT THE AUTHOR

...view details