இது குறித்து காவல் துறை கூறுகையில், "உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 15 நாள்களுக்கு முன், வயல்களில் வேலை பார்த்திருந்த தனது சகோதரருக்கு மதிய உணவு வழங்க 23 வயது பெண் சென்றுள்ளார்.
அப்போது அவரைக் கடத்திய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீட்டிற்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார்.