முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்க எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு (Special Protection Group) வழங்கப்பட்டது.
அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதனை திரும்பப் பெறுவதாகவும், தொடர்ந்து அவர்களுக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. இந்த செய்தி காங்கிரஸ் கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.