புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தடையாகவும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இதனால் அண்ணா சிலை அருகே துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
இருப்பினும் போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர்.