தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராணுவத்தை முழுவதுமாக திரும்பப் பெற்ற சீனா? - சீனா

கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது ராணுவத்தை முழுவதுமாக திரும்பப்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனா
சீனா

By

Published : Jul 9, 2020, 11:44 PM IST

கடந்த நான்கு நாள்களாக ஹாட் ஸ்பிரிங், கோக்ரா எல்லைப் பகுதிகளில் நடைபெற்றுவந்த ராணுவத்தைத் திரும்பப்பெறும் நடவடிக்கை இன்று(ஜூலை 9) நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 2 கி.மீ., தொலைவு சீனா தனது ராணுவத்தை பின்வாங்கியுள்ளதாக இந்திய தரப்பு நேற்று(ஜூலை 8) தெரிவித்தது.

பதற்றத்தை மேலும் குறைக்கும் நோக்கில், இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவாரத்தையில் ஈடுபடவுள்ளனர். மோதலை தவிர்க்கும் வகையில், கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங், கோக்ரா பகுதிகளிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை படைகள் விலக்கப்பட்டுள்ளது.

தற்போது, முழு கவனமும் பாங்காங் சோ ஏரி பகுதிக்கு திரும்பியுள்ளது. பிங்கர் 4 முதல் பிங்கர் 8 வரையிலான பகுதியில் படைகளை திரும்பப்பெற வேண்டும் என இந்தியா அறிவுறுத்திவருகிறது. அடுத்த இரண்டு மூன்று நாள்களில் நான்காம் கட்ட உயர் மட்ட ராணுவ பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதா என்பதை இரு நாட்டு ராணுவமும் அடுத்த ஓரிரு நாள்களில் உறுதி செய்யும் எனவும் கூறப்படுகிறுது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தங்களது தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சீனா ஒப்பு கொண்டது. இதனிடையே, கிழக்கு லடாக் பகுதியில் 20,000 ராணுவ வீரர்களையும் ,வடக்கு சிஞ்சியாங் பகுதியில் 10,000 ராணுவ வீரர்களையும் சீனா குவித்துள்ளதாக, அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவந்தது. பதற்றத்தை குறைக்கும் நோக்கில், உயர் மட்ட ராணுவ அலுவலர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். இதன் விளைவாக, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவதாக இருநாடுகளும் ஒப்புக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details