உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் முகக் கவசம் அணிந்த சாண்டா கிளாஸின் பிரமாண்டமான 3டி மணல் சிற்பத்தை உருவாக்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
3டி மணல் கலை மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து! - மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்
ஒடிசா : உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 3டி மணல் கலை மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
Sudarsan Pattnaik Christmas greetings
இந்த 3டி மணல் கலை, 100 அடி நீளத்தில் ஆறாயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. இரண்டு சாண்டா கிளாஸ்கள் ஒரு முகக் கவசத்தை தாங்கிப் பிடித்தவாறு இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தன்று “முகக் கவசம் பயன்படுத்துங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்ற விழிப்புணர்வு செய்தியைப் பரப்பும் நோக்கில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அமிதாப் பிறந்தநாள்- மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய மணல் சிற்பக் கலைஞர்