தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ராமர் கோயில் எழுப்ப பாஜக அரசே நடவடிக்கை எடு!'

மும்பை: மக்களவையில் 350-க்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட பாஜக கூட்டணி அரசு, மவுனம் காக்காமல் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது.

Shiv Sena

By

Published : Jun 18, 2019, 1:39 PM IST

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தனது மகன் ஆதித்யாவுடன் கடந்த 16ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராம் லல்லா கோயிலுக்குச் சென்று வணங்கிவந்தார். இது குறித்து ’சாம்னா’ பத்திரிகை தலையங்கத்தில் ராமர் பிறந்த பூமியில் கோயில் கட்டுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இஸ்லாமியக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியோ அல்லது உச்ச நீதிமன்றம் மூலம் அணுகியோ இதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாற்று வழிகளும் தோல்வியுற்றால், ஆளும் பாஜக அரசு ஒரு கட்டளை கொண்டுவருவதன் மூலம் ராம் கோயில் கட்டப்படத் தளங்கள் ஏதுவாக அமையலாம் என்று பத்திரிகையின் தலையங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சிவசேனா கட்சி, ‘ராமர் கோயில் கட்டும் அனைத்தும் ஏற்பாடுகளும் தோல்வியுற்றிருக்கும் நிலையில், 350-க்கும் மேல் மக்களவை உறுப்பினர்களை வைத்திருக்கும் பாஜக அரசு இது தொடர்பான முடிவுகளை உடனே எடுக்க வேண்டும். இனிமேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் காலதாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ABOUT THE AUTHOR

...view details