கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் பல்வேறு தரப்பினர் பெரும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, வெளிமாநிலத் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். பெரும்பாலான திருமண நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெறவிருந்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் மகனின் திருமணம், ராமநகர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து குமாரசாமியின் ஊடகச் செயலாளர் கே.சி. சதாநந்தா கூறுகையில், "குமாரசாமியின் மகனான நிக்கிலின் திருமணம் ஊரங்டங்கின் காரணமாக பிடாடியில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெறவுள்ளது.