தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பேஸ்புக்கில் பரப்புரையை தொடங்கிய தெலுங்கு தேசம்!

ஹைதராபாத்: வாக்காளர்களை கவரும் வகையில் தெலுங்கு தேசம் கட்சி சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் புதிய பரப்புரை யுக்தியை மேற்கொண்டு வருகிறது.

ஸ்டிக்கர் முறை

By

Published : Mar 21, 2019, 10:52 PM IST

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாடுமுழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 23ம் தேதி முடிவடைகிறது. இதையொட்டி தேசிய கட்சிகள் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக சமூக வலைதளமான பேஸ்புக், ட்விட்டரில் கட்சி தொடர்பான தகவல்கள் மற்றும் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றன.

தெலுங்கு தேசம் கட்சி ஸ்டிக்கர் முறை பரப்புரையை வாட்ஸ்அப்பில் தொடங்கியுள்ளது

ஆந்திர மாநிலத்திற்கு சட்டப்பேரவைக்கான தேர்தலும் சேர்ந்து வருவதால் சற்று வித்தியாசமான ஸ்டிக்கர் பரப்புரை முறையை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கையாண்டுள்ளார். அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், கட்சியின் நிறுவனரான என்.டி ராமராவ் பெயரில் உருவாக்கியுள்ள வாட்ஸ்ஆப் மூலம் பகிரப்படும் ஸ்டிக்கர் முறை பரப்புரையை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார். இந்த ஸ்டிக்கர் முறை பரப்புரையில் கட்சியின் சின்னங்கள், அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களான அண்ணா கேன்டீன், சந்திரண்ணா பீமா யோஜனா, போலவராம் திட்டம், அமரவாதி கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்த விவரங்கள் ஸ்டிக்கர் வடிவில் இடம் பெற்றுள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் தெலுங்கு தேசம் மட்டுமில்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பரப்புரையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details