கோவாவில் பழங்குடி மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கோவா ஆளுநர் சத்யபால் மாலிக் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "ஒட்டுமொத்த இந்தியாவே அயோத்தியில் ராமருக்கு பெரிய கோயில் வேண்டும் என்று கூறிவந்த நிலையில் யாரும், அந்த கோயிலில் ராமருக்கு உதவிய பட்டியலினத்தவருக்கோ அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவருக்கோ சிலை வைப்பதைப் பற்றி பேசவில்லை.
அயோத்தியில் பட்டியலினத்தவருக்கு சிலை வேண்டும் - கோவா ஆளுநர்
பனாஜி: ராமருக்கு உதவிய பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கும் அயோத்தியில் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என கோவா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமருக்கு சிலை வைப்பதுபோல், இதிகாச புராணமான ராமாயணத்தில் ராமருக்கு கங்கை கரையை கடக்க உதவிய பழங்குடியைச் சேர்ந்த படகோட்டிக்கும், மேலும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் சபரி என்னும் மூதாட்டி ராமரிடம் நல்லாசியைப் பெற்றிருப்பார். அதனால் இவர்களுக்கும் அயோத்தியில் சிலைகள் வைக்க வேண்டும். கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைத்த பிறகு இதுகுறித்து அறக்கட்டளைக்கு கடிதம் எழுதுவேன்” என்றார்.
அயோத்தியில்ராமருடன், அவர்களுக்கும் சிலை இல்லை என்றால் அந்த கோயில் முழுமையடையாது! தமது இந்த பேச்சு சர்ச்சையானல் கூட அதைப் பற்ற தமக்கு பயம் இல்லை என்றார்.