தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து? - restoration of statehood to JK

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Kashmir
Kashmir

By

Published : Mar 14, 2020, 11:13 PM IST

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்தத் தலைவராக இருந்து வந்த அல்தாப் புகாரி அக்கட்சியிலிருந்து விலகி ஜம்மு காஷ்மீர் ஆப்னி கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து, இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவர் டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

தொகுதி மறு வரையறை, முழு மாநில அந்தஸ்து உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இச்சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, "ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசிக்கப்படும்" என்றார்.

அரசியலில் மக்களைப் பங்கேற்க வைப்பதன் மூலமாக மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் எனவும், மக்களின் குரலை உயர்த்த அரசு நிர்வாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது எனவும் பிரதமர் மோடி இச்சந்திப்பின்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்' - குலாம் நபி ஆசாத்

ABOUT THE AUTHOR

...view details