டெல்லியில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இடிவி பாரத் செய்தி ஆசிரியர் நிஷாந்த் சர்மாவுடன் பிரத்தியேக நேர்காணல் மேற்கொண்டார்.
இந்த நேர்காணலில் அவர் பேசுகையில், தற்போதைய நிலவரப்படி டெல்லியில் 2 ஆயிரத்து 150க்கும் மேற்பட்டோர் கரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர், 47 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பு தீவிரத்தன்மை கொண்ட 10 விழுக்காடு பேர் மட்டுமே மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் கண்காணிப்பு மையங்களில் உள்ளனர்.
வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்தி பரிசோதனையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஒரு லட்சம் கருவிகளை டெல்லி அரசு கொள்முதல் செய்துள்ளது. இருப்பினும் ஐ.சி.எம்.ஆர். மத்திய அரசு உறுதியளித்த பின்னரே ரேபிட் கருவி பரிசோதனையை டெல்லி அரசு தொடங்கும்.
டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆயிரத்து 80 பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வார காலமாக இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர்.