உலக மக்களின் வாழ்வு, வாழ்வாதாரத்துக்கு கரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த வைரஸ் பெருந்தொற்று நோயிக்கு எதிராக தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் மற்றும் நோயெதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சிகள் நடந்துவருகிறது. மற்றொரு புறம் கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது? எவ்வாறு பரவியது? எப்படி பரவியது? இது இயற்கையான வைரஸா அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் தொடர்கிறது.
இதற்கிடையில் கரோனா வைரஸை பரப்பியது வௌவால்கள்தான் செய்திகள் பரவின. அடுத்த சில நாள்களில் கரோனா வைரஸ் தொற்று பாங்கோலின் (எறும்புதின்னி) விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்று செய்திகள் வெளியானது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில், ஆராய்ச்சியாளர் இந்த இரு விலங்குகள் மீதும் ஒரு கண் வைத்துக் கொண்டே வருகின்றனர்.
பொதுவாக கரோனா வைரஸில் பல்வேறு வகைகள் உள்ளன. இந்த வைரஸ்கள் அனைத்தும் மனிதர்களுக்கு பயங்கரமான நோய்களை உருவாக்கிவருகின்றன. ஆனால் பாங்கோலின் விலங்குகள் வைரஸிடம் குறைவாகவே பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. இந்த ஆபத்தான பாலூட்டி இனங்களில் காணப்படும் மரபணு வேறுபாடு காரணமாக இது நிகழ்கிறது என்று ஆராய்ச்சியாளர்களின் மதிப்பீடுகின்றனர்.
எனினும் கரோனா வைரஸ்கள் பாங்கோலின் விலங்குகளிடமிருந்து பரவியதாகவும் ஆராய்ச்சியாளர்ளகள் கருதுகின்றனர். இதில், விஞ்ஞானிகள் முன்வைக்கும் முக்கிய கேள்வி, பாங்கோலின்ஸில் உள்ள மரபணுவின் தனித்துவம். இது வைரஸினால் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்க விடாமல், மனிதர்களை மிகவும் கடுமையாக பாதிக்கிறது.
இந்த பாங்கோலின் மரபணு முறையைக் கண்டறிய முடிந்தால், மனிதர்களிடையே கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் சிகிச்சையை அறிய முடியும். மேலும் கரோனா வைரஸ்க்கு எதிரான சிகிச்சை முறையை எளிமையாகவும் அமைத்துக் கொள்ளலாம். மனிதர்களுடன் ஒப்பிடும் போது பாங்கோலின்களின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையானது.