ஜி.டி.பி விகிதம் சரிவை சந்தித்திருப்பதை சுட்டிக்காட்டி சி.எஸ்.ஓ வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் "பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டு மீண்டும் சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்வதற்கு பல மாதங்கள் ஆகும். மத்திய பாஜக அரசின் செயலற்ற தன்மையும், நிர்வாக திறன் இன்மையும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை அளிக்கவில்லை.
ஏப்ரல்-ஜூன் 2020 காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து சி.எஸ்.ஓ வெளியிட்டுள்ள தற்காலிக மதிப்பீடுகள் மூலமாக நாட்டு மக்களுக்கு இந்த அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை வெட்டவெளிச்சமாகி உள்ளது.
முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 % குறைந்துள்ளது. அதே போல, 2019-2020 ஆம் ஆண்டின் முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 20% குறைந்துள்ளது என்பதையும் நாம் அறியலாம்.
பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு 'கடவுளின் செயல்' என்று குற்றம் சாட்டிய நிதி அமைச்சர் விவசாயிகளுக்கும் விவசாயிகளை ஆசீர்வதித்த கடவுள்களுக்கும் நன்றியுடன் இருக்க வேண்டும். காரணம், நாட்டின் விவசாயத்துறை, வனத்துறை மற்றும் மீன்பிடித்துறை மட்டுமே 3.4% வளர்ச்சியை சந்தித்துள்ளது. பொருளாதாரத்தின் மற்ற ஒவ்வொரு துறையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.