மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், அவர்களது தொண்டர்களும் மேற்கு வங்க மாநிலத்தை ஒரு குட்டி பாகிஸ்தானாக மாற்றியுள்ளனர். மேலும், மம்தாவுக்கு ராம் என்ற நாமமே ஒவ்வாமைக்குரியது. 'அது உண்மையின் அடையாளமாகும்' என திரிபுரா பாஜக பெண்கள் பிரிவு தலைவர் பாபியா தத்தா தெரிவித்தார்.
திரிபுராவின் பாஜக மஹிலா மோர்ச்சா பிரிவினர் நாடு தழுவிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நுாற்றுக்கணக்கான பெண்கள் சேர்ந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஜெய் ஸ்ரீ ராம் என எழுதி அஞ்சல்அட்டை அனுப்பவுள்ளதாக தத்தா தெரிவித்தார்.