தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவுக்கு ஊரடங்கு தேவையில்லை - முதலமைச்சர் எடியூரப்பா - பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்கு ஊரடங்கில் இருந்து அதிகப்படியான தளர்வுகள் அளிக்கப்படவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

will-request-pm-for-more-relaxations-in-karnataka-yediyurappa
will-request-pm-for-more-relaxations-in-karnataka-yediyurappa

By

Published : Jun 16, 2020, 6:28 PM IST

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா இன்று (ஜூன் 16) காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடக மாநிலத்திற்கு ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அளிக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். கர்நாடக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவேண்டும். அவர்கள் இழந்த பொருளாதாரத்தை மீட்க தளர்வுகள் தேவைப்படுகின்றன.

மாநிலத்தில் மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மத்திய அரசு அளித்துள்ள கட்டுப்பாட்டுத் தளர்வுகளுடன் தற்போது இயங்கிவருகின்றன என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் நாளை (ஜூன் 17) நடைபெற உள்ள காணொலி காட்சி ஆலோசனையில் ஊரடங்கில் தளர்வுகள் குறித்து எடியூரப்பா விவாதிக்க உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details