நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய, சந்திரயான் 2 விண்கலம் ஜூலை மாதம் இறுதியில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்க 2 கி.மீ தூரமே இருந்த நிலையில், அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து லேண்டருடனான தொடர்பை உருவாக்க இஸ்ரோ முயற்சித்து வந்தது, அதையடுத்து தேசிய அளவிலான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
’பகலில் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிப்போம்’
நிலவின் தென் துருவ பகுதியில் இரவு இருப்பதால், அந்த பகுதியில் பகல் வந்ததும் மீண்டும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிப்போம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
vikram lander
இந்நிலையில் நிலவின் தென் துருவ பகுதிக்கு இரவு நேரம் தொடங்கியதை அடுத்து சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது, தற்போது நிலவின் தென் துருவ பகுதியில் இரவு உள்ளதால், அந்த பகுதியில் பகல் வந்ததும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிப்போம் என்று கூறினார்.
இதையும் படிங்க: 'விக்ரமுடன் இனி தொடர்பில்லை... எங்களது அடுத்த டார்கெட் ககன்யான்தான்!' - சிவன் உற்சாகம்