ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி அண்மையில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரது இந்த நியமனம் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கங்கை நிதியையொட்டியுள்ள பகுதிகளில் பிரியங்கா காந்தி மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து நிதின் கட்காரி விமர்சித்துள்ளார்.
இதுக்கு முன்னாடி கங்கை நீரை குடித்தாரா? - நிதின் கட்காரி கேள்வி - பிரியங்கா காந்தி
நாக்பூர்: தாங்கள் நீர் வழிச்சாலை அமைத்ததால்தான் பிரியங்கா காந்தியால் கங்கையில் பயணம் மேற்கொள்ள முடிவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நிதின் கட்காரி
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி இன்று மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், பிரியங்கா காந்தி தற்போது கங்கை நதியில் பயணம் மேற்கொள்கிறார். நான் அலஹாபாத்- கங்கை நீர் வழிப்பாதையை ஏற்படுத்தாவிட்டால் அவரால் பயணம் மேற்கொண்டிருக்க முடியுமா? அவர் கங்கை நீரையும் குடித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அவர் இதை செய்திருப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.