இது குறித்து அவர் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தலில் கொடுத்த விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி ஆட்சியமைத்த சில நாள்களிலேயே நிறைவேற்றப்பட்டது. எனவே, அதன்பின் விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடன் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது. அரசு சார்பாக இந்த ஆண்டுநெல் கொள்முதல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
விவசாயக் கடனை ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்ய முடியாது: சத்தீஸ்கர் முதலமைச்சர்! - விவசாயக் கடன் தள்ளுபடி
ராய்ப்பூர்: விவசாயக் கடனை ஒவ்வொரு முறையும் அரசு தள்ளுபடி செய்யாது என சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
Will not waive farm loans every time, says Chhattisgarh CM
2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 68 தொகுதிகளை வெல்வதற்கு விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதி முக்கியக் காரணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: ரஷ்யாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடனளிக்கும் மோடி!