கர்நாடகா சட்டப்பேரவைக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதிருப்தியில் உள்ள 16 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 12 பேர், "உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்" என தெரிவித்துள்ளனர்.
'வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்' - கர்நாடக எம்எல்ஏக்கள்!
மும்பை: "நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்" என அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்தை தெரிவித்த 12 பேரும் பாஜகவுக்கு ஆதரவான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனை தவிர்த்து உள்ள 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் ஆதரவாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.
225 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவையில் பாஜகவின் ஆதரவாளர்களாக பார்க்கப்படும் மும்பையில் உள்ள 12 பேருடன் சித்தராமையாவின் ஆதரவாளர்களான நான்கு பேர் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்றால்தான் பாஜக வெற்றிபெறும். சித்தராமையா ஆதரவாளர்கள் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தால் காங்கிரஸ் வெற்றிபெறுவது உறுதியாகும்.