தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இருநாட்டு உறவை மேம்படுத்துமா கோத்தபயாவின் அழைப்பு! - கோத்தபயா-மோடி சந்திப்பு

டெல்லி: இருநாட்டு உறவுகளை மேம்படுத்த இலங்கைக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச, இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

SL
SL

By

Published : Nov 30, 2019, 8:30 AM IST

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வரச்சொல்லி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்ற கோத்தபய, இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இந்தியா வந்தடைந்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் வந்திறங்கிய அவரை, மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். கோத்தபயவுடன் இலங்கை வெளியுறவுத் துறை செயலர் ரவிநாதா ஆர்யசின்ஹ, கருவூலச் செயலர் என்.ஆர். அட்டிகாலே உள்ளிட்ட உயர் மட்ட அலுவலர்கள் குழுவும் வந்தது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

இந்நிலையில், டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு வரவேற்பளித்தனர்.

இதையடுத்து அவர், ராஜ்கோட்டிலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, இருநாட்டு உறவுகளை மேம்படுத்த இலங்கைக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச, இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். கோத்தபய நாளை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்புவார் என்று அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details