தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தியாவில் அமலுக்கு வருமா தேசிய பாதுகாப்புச் சட்டம்?

லக்னோ: அயோத்தியா தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தேவைப்பட்டால் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் ஒ.பி. சிங் தெரிவித்துள்ளார்.

Ayodhya

By

Published : Nov 4, 2019, 4:23 PM IST

Updated : Nov 4, 2019, 5:07 PM IST

அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமூகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது.

இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை ஏற்று சன்னி வக்பு வாரியம் வழக்கைத் திரும்பப் பெறவுள்ளதாக தகவல் வெளியானது. அயோத்தி வழக்கைத் தொடர்ந்த மற்ற இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு அதிர்ச்சியாகினர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் ஒ.பி. சிங், "நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டம் ஒழுங்குக்கு பிரச்னை வரும் பட்சத்தில் அயோத்தியாவில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 4, 2019, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details