கர்நாடகாவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறுகையில், "அடுத்த நான்கைந்து நாட்களில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமையும். பாஜக சிறந்த ஆட்சி தரும். குமாரசாமியால் முதலமைச்சராக தொடர முடியாது. இது அவருக்கே தெரியும். சட்டப்பேரவையில் நல்ல உரை நிகழ்த்திவிட்டு அவரே பதலி விலகிவிடுவார்" என்றார்.
'கர்நாடகாவில் அடுத்த நான்கைந்து நாட்களில் பாஜக ஆட்சி' - அரசியல் நிலவரம்
பெங்களூரு: காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு பெரும்பான்மை நிரூபிக்க பலம் இல்லாததால் அடுத்த நான்கைந்து நாட்களில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

yeddy
முன்னதாக, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ராஜினாமாவை ஏற்று கொள்ள கர்நாடக சபாநாயகருக்கு அறிவுறுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தனர். சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து நீதிமன்றம் உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.
Last Updated : Jul 16, 2019, 2:14 PM IST