இன்று உலக ஊடகச் சுதந்திர தினத்தையொட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "இந்தியாவில் ஊடகங்கள் முழு சுதந்திரம் அனுபவித்துவருகின்றன. நாட்டின் ஊடக சுதந்திரம் குறித்து தவறான கண்ணோட்டத்தைப் பரப்பும் ஆய்வுகளை விரைவில் அம்பலப்படுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடக சுதந்திர குறியீட்டில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 142வது இடத்தை பிடித்துள்ளது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மொத்தம் 180 நாடுகள் மதிப்பீடும் இந்த குறியீட்டுப் பட்டியல் 'ரிப்போர்டர்ஸ் விட்டவுட் பார்டர்ஸ்' ஆய்வு அறிக்கையில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.