கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஊரடங்கால் பொதுபோக்குவரத்து முடங்கியுள்ளதால், வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதற்கு தீர்வுகாணும் வகையில் மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கினாலும் அதற்கு அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊரடங்கினால் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகளவில் பாதிகப்பட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்லவும் தொடங்கினர். இதன் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் இறந்துள்ளனர்.