ஒடிசா மாநிலத்தில் மே 3ஆம் தேதி ஃபோனி புயல் தாக்கியதில் தற்போது வரை 41 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவில் பூரி, குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின. பல லட்சம் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல மக்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.
ஃபோனி புயலின்போது வீடு இழந்தோருக்கு வீடு கட்டித் தரப்படும் - நவீன் பட்நாயக் - ஃபோனி
புவனேஷ்வர்: ஃபோனி புயலின்போது வீடு இழந்தோருக்கு நிரந்தரமாக வசிக்கக் கூடிய வீடுகள் கட்டித் தரப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளார்.
நவீன் பட்நாயக்
இந்நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், "ஃபோனி புயலால் பல வீடுகள் முழுவதுமாகவும், பாதியாகவும் சேதமடைந்துள்ளது. இதனால் அவர்களுக்கு நிரந்தரமான, தரமான வீடுகள் கட்டித் தரப்படும். வீடுகள் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளது என்பதை கணக்கெடுக்கும் பணி மே 15ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்குள் நிறைவடையும். ஜூன் 1ஆம் தேதி முதல் பணி ஆணை வழங்கப்படும்" என்றார்.