புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. இருவருக்கான வார்த்தை போர் நீதிமன்றம் வரை சென்று அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
நீதிமன்ற தீர்ப்பை மதிச்சு செயல்படுங்க கிரண்பேடி! நாராயணசாமி அறிவுரை - chief minister
புதுச்சேரி: தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுவரும் கிரண்பேடி நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அப்போது, அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கமுடியாது என்றும், அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை வரவேற்ற நாராயணசாமி, அரசு நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என கிரண்பேடியை உயர் நீதிமன்றம் எச்சரித்த நிலையில், தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அவர் செயல்பட்டுவருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதே போன்று கிரண்பேடி நடந்துகொண்டால் அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என எச்சரித்த நாராயணசாமி, இனிமேலாவது கிரண்பேடி நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.