உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அம்மாநில தொழிலாளர் துறை இணை அமைச்சர் ரகுராஜ் சிங் கலந்துகொண்டார்.
அப்போது உரையாற்றிய அவர், "பிரதமர் மோடிக்கோ, முதலைச்சர் யோகி ஆதித்ய நாத்துக்கோ எதிராக முழக்கம் எழுப்புவர்களை உயிரோடு புதைத்துவிடுவேன்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வெறும் ஒரு சதவீதத்தினரே எதிர்த்து வருகின்றனர். இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, இங்கு இருப்பதையெல்லாம் அனுபவித்துக்கொண்டு தலைவர்களுக்கு எதிராக முழுக்கம் எழுப்பி வருகின்றனர். இந்த நாடு அதன் மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. முதலமைச்சர், பிரதமருக்கு எதிராக முழக்கம் எழுப்புவது ஏற்றுக்கொள்ளப்படாது" என்றார்.
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அலிகார்க் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைக் குறிப்பிட்டே அமைச்சர் இவ்வாறு பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 'சபரிமலை வழக்கின் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை'