தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அடுத்தத் தேர்தலில் மீண்டு(ம்) வருவோம்..! - மம்தா உறுதி - மம்தா

கொல்கத்தா: "2021ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டு வந்து, மீண்டும் ஆட்சி அமைப்போம்" என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Mamata Banerjee

By

Published : Jul 6, 2019, 10:06 PM IST

மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக யாரும் எதிர்பாராத விதமாக பெரும் வெற்றிபெற்றது. மேலும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் அக்கட்சியில் இருந்து விலக பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்குராவில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "கட்சியில் இருந்து கொண்டு பாஜகவிற்கு உழைக்கும் துரோகிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக வேண்டும். 2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டு வந்து, மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details