திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அக்கட்சியின் பாங்குரா, ஜார்கிராம் மாவட்ட தலைவர்களுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 'நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் அவரவர் தொகுதிகளில் சரிவர பணியாற்றவில்லை. இதனால் மூன்று நாடாளுமன்ற சீட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் இழந்துள்ளது. அவர்கள் அரசாங்கத் திட்டங்களில் இருந்து சலுகைகளை எதிர்பார்த்து தேர்தல் பணியில் கோட்டைவிட்டுவிட்டார்கள்.
‘இழந்த ஓட்டுகளை 2021 தேர்தலில் மீண்டும் பெறுவோம்’ - மம்தா - கொல்கத்தா:
கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் இழந்த வாக்குகளை 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பெறுவோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இழந்த ஓட்டுக்களை திரும்ப பெறுவோம்-மம்தா பானர்ஜி
இதேபோல் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் இருக்காது. மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் இழந்த வாக்குகளை 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திரும்ப பெறவேண்டும். அதற்கேற்ப உழைக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.