தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வோம்: நாராயணசாமி - நரேந்திர மோடி

புதுச்சேரி: மோடி அழைப்பு விடுத்தால் அவரது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வோம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

நாராயணசாமி

By

Published : May 27, 2019, 3:23 PM IST

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரின் சிலைக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், கட்சி நிர்வாகிகள் நேருவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Narayanasamy byte

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு கிரண்பேடியும் ஒரு காரணம். மோடி பதவியேற்பு விழாவிற்கு புதுச்சேரி மாநிலத்திற்கு அழைப்பு விடுத்தால் நாங்களும் செல்வோம். அப்போது அவரை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு நிதி அளிக்குமாறு வலியுறுத்துவோம். புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்“ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details