கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு சிறந்த சுற்றுலாத்தலமாகும். இயற்கை எழில்மிகு இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவிகின்றனர். கடந்த சில தினங்களாக இங்கு சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டுயானையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
குறிப்பாக, இந்த காட்டுயானை மூணார் தோட்டப்பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் காலையில் சுற்றித்திரிகிறது. ஏற்கனவே காட்டுயானைகள் விவசாய நிலங்களை அதிகளவில் சேதப்படுத்தி வரும் நிலையில் இக்காட்டுயானையால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.