தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'14 நாள்கள் பட்டினி' - கர்ப்பிணி யானையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

திருவனந்தபுரம்: கர்ப்பிணி யானையின் உடற்கூறாய்வு அறிக்கையின்படி, வலியினால் 14 நாள்கள் சாப்பிட முடியாமல் பட்டினியாக இருந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

By

Published : Jun 5, 2020, 8:42 PM IST

யானை
யானை

கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள அம்பலபாரா என்ற பகுதியில், உணவுத் தேடி வந்த கர்ப்பிணி யானை வெடி வைத்திருந்த அன்னாசிப் பழத்தைச் சாப்பிட்டதால் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஒன்றுதிரண்டு குரல் கொடுத்ததால், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

கேரள முதலமைச்சரும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், பத்திரிகையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்நிலையில், யானையின் உடற்கூறாய்வு அறிக்கையின்படி, 14 நாள்கள் பட்டினியாக இருந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், ''உயிரிழந்த யானைக்கு 15 வயது இருக்கலாம். விவசாய நிலத்தில் யானை பயிர்களை சாப்பிட்ட போது, அன்னாசிப் பழத்தை கடித்ததில் அதிலிருந்த வெடி வெடித்துள்ளது. இதனால், யானைக்கு மேல் தாடை, கீழ் தாடைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாக்கும் துண்டிக்கப்பட்டுள்ளது. காயம் ஏற்படுத்திய வலி காரணமாக, வெள்ளியாற்றுக்குள் இறங்கி வலியை குறைக்க யானை முயன்றுள்ளது.

இதையடுத்து, தொடர்ச்சியாக இரண்டு நாள்களாக தண்ணீருக்குள் நின்ற யானையின் மூச்சுக்குழாய் சேதமடைந்து, நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது. வலியினால் யானை சுமாராக 14 நாள்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இறந்து போன யானையின் வயிற்றுக்குள் 2 மாத சிசு இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details