தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமணத்தை மீறிய உறவு: மருமகளுடன் திட்டமிட்டு கணவனை கொன்ற மனைவி! - உத்தரப் பிரதேச மாநில செய்திகள்

லக்னோ: இளைய மருமகளுடன் கணவன் நெருங்கி பழகியதை அடுத்து மூத்த மருமகளின் உதவியோடு தன் கணவரை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் படோஹி பகுதியில் நடந்துள்ளது.

murder
murder

By

Published : Dec 14, 2020, 3:03 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள படோஹி மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவு காரணமாக பெண் ஒருவர் தன் கணவனை மூத்த மருமகளின் உதவியுடன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நபருக்கு (55) 4 மகன்கள் உள்ளனர். நால்வரும் மும்பையில் பணிபுரிந்து வருகின்றனர். அதில் இருவருக்கு திருமணமான நிலையில் மனைவிகளை பெற்றோர் வீட்டில் விட்டு வேலைக்குச் சென்றிருக்கின்றனர். சகோதரர் இருவரின் மனைவிகளும் ஒரே வீட்டில் தங்கியிருந்தாலும் இணக்கமாக இல்லை.

இதனிடையே, மாமனாருக்கும், இளைய மருமகளுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. அவ்வப்போது நெருக்கமாகவும் இருந்து வந்த நிலையில், இதையறிந்த மூத்த மருமகள் மாமியாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, இளைய மருமகளையும், கணவரையும் கண்டித்ததுடன் அந்த உறவைத் துண்டித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் இருவரும் எப்போதும் போலவே பழகி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாமியார், இளைய மருமகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டார். இதை அறிந்ததும் விரக்தியடைந்த மாமனார், இளைய மருமகளின் வீட்டிற்கே சென்று அவரை அழைத்து வந்ததுடன், மனைவியையும், மூத்த மருமகளை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்.

இருவருக்கும் வேறு போக்கிடம் இல்லாததால் தங்களது வீடு இருந்த தெருவிலே வசித்து வந்தனர். மேலும், தங்களை வீட்டை விட்டு வெளியேற்றிய இருவரையும் பழி வாங்க திட்டமிட்டனர். இதனிடையே, நேற்று இரவு (டிச.13) வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாமனாரையும், இளைய மருமகளையும் சரமாரியாக தாக்கினர். இதிலிருந்து தப்பிய மருமகள் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததைக் கூறினார்.

வீட்டில் தனியாக இருந்த மாமனாரை மீட்க, காவல் துறையினருடன் இளைய மருமகள் வருவதற்குள், மாமியாரும், மூத்த மருமகளும் மாமனாரின் கழுத்தை அறுத்து நீச்சல் குளத்தில் போட்டுவிட்டு தப்பிவிட்டனர்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபர் குறித்து அவரது மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சூதாட்ட தோல்வியால் மனைவி அனுப்பிவைப்பு - பிகாரில் அரங்கேறிய கொடுமை

ABOUT THE AUTHOR

...view details