இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.
இந்தத் தாக்குதலின்போது இந்திய வீரர்களைவிட சீன வீரர்கள் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தார்கள் என்றும் இந்திய வீரர்கள் ஆயுதமின்றி அங்கு சென்றனர் என்றும் தகவல் வெளியாகின. மேலும், இரவில் இந்திய வீரர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதைக் கண்காணிக்க தெர்மல் ஸ்கேனர்களையும் சீனா பயன்படுத்தியாகவும் தகவல் பரவியது.