தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 5, 2019, 3:18 PM IST

ETV Bharat / bharat

வெங்காயம் தட்டுப்பாடு ஏன்?

வெங்காயத்தின் விலையேற்றம் மக்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. வெங்காயத்தின் விலை ரூ.100ஐ தொட்டதால் மக்கள் ஏராளமான பிரச்னைகள் மற்றும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்னை நம் நாடு மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் காணப்படுகிறது. இந்த நெருக்கடி ஏன் நிலவுகிறது? வெங்காயத்தின் விலை ஏன் அச்சத்தைத் தருகிறது? அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது.?

Why Onion Crisis
Why Onion Crisis

இந்தியா பாரம்பரிய மிக்க நாடு. நம்நாட்டு மக்களின் உணவு முறையும் கலாசாரத்தோடு பாரம்பரிய ஆரோக்கியமும் நிறைந்தது. அந்த வகையில் நம் உணவோடு பின்னிப்பிணைந்த ஒரு உணவுப் பொருள் வெங்காயம். வடக்கே சமோசா முதல் தெற்கே சாம்பார் வரை வெங்காயம் தான் பிரதானம்.
மக்களின் உணர்வு சார்ந்த உணவு என்பதால் இதன் விலையேற்றம் நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கும். முந்தைய காலங்களில் வெங்காயம் வாங்க, வங்கியில் கடன் கேட்ட சம்பவங்களும் இந்தியாவில் நடந்துள்ளது. அந்த பிரதான உணவுப் பொருளின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் நிச்சயம் கண்ணீரை வரவழைக்கிறது.

வெங்காய உற்பத்தி
ஆண்டுதோறும் நாட்டின் 1.20 மில்லியன் ஹெக்டேரில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. அதன் மூலம் 19.40 மில்லியன் டன் வெங்காயம் கிடைக்கிறது. அதாவது ஒரு ஹெக்டேருக்கு 16 டன் என்ற முறையில் வெங்காய உற்பத்தி உள்ளது.

வெங்காய உற்பத்தி
மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முக்கிய உற்பத்தி மையங்களாக திகழ்கின்றன. இந்த காரீப் பருவத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 76,279 ஹெக்டேரில் வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது. கர்னால் சந்தையில் திங்கட்கிழமை (டிச.2) குவிண்டால் ரூ.10,150க்கு விற்பனை ஆனது.

காரணம்
இந்த திடீர் விலையேற்றத்துக்கு என்ன காரணம்? செயற்கையான மனிதத்தவறா? அல்லது இயற்கையா? கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இது சற்று அதிக மழைப்பொழிவுதான்.

அந்த வகையில் குஜராத்தில் இரு மடங்கும், மத்தியப் பிரதேசத்தில் 70 சதவீதமும் தெலங்கானாவில் 65 சதவீதமும் அதிக மழைப்பொழிவு இருந்துள்ளது.

இந்தியாவில் மழை பொழிவு வழக்கத்தை விட அதிகரிப்பு
பொதுவாகவே அக்டோபர் மாதம் மூதல் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வந்து விடும். ஏனெனில் அச்சமயத்தில் வெங்காய வரத்து அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது அதிக மழைப்பொழிவு வெங்காய வரத்தை குறைத்து விட்டது. வரத்து குறைந்த காரணத்தால் விலையேற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

பாதிப்பு
இதனைத் தொடர்ந்து அரசாங்கம் நவம்பர்வரை ரூ. 3,467 கோடி வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளது. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, வருகிற ஜனவரி மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

வெங்காய விலையேற்றத்தால் மக்கள் பாதிப்பு (விளக்கப் படம்)
தற்போது ஆப்கானிஸ்தான், துருக்கி, ஈரான், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அண்டை நாடுகளிலும் இதே நிலைமை நீடிக்கிறது. வங்கதேசத் தலைநகர் டாக்காவில் கிலோ ரூ.25க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.250க்கு விற்கிறது. மியான்மரில் அந்நாட்டு பணத்துக்கு கிலோ ரூ.450க்கு விற்ற வெங்காயம் ரூ.850க்கு விற்பனை ஆகிறது. நேபாளத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.150 ஆக உள்ளது. பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் வெங்காய விலையேற்றம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் வருடத்திற்கு சராசரியாக 19 கிலோ வரை வெங்காயம் உட்கொள்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.!

இதையும் படிங்க: வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details