இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, நம் ஆயுதப் படையை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம். காங்கிரஸ் உள்பட 130 கோடி இந்தியர்களும் நம் ஆயுதப் படையின் வீரத்தை நம்புகிறோம். ஆனால், பிரதமர் மோடி ஏன் சீனா குறித்து பேச நடுங்குகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லை பதற்றம் தொடங்கிய நாள் முதல் சீனா குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ மோடி பேசவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டிவருகிறது.
ராகுல் காந்தி இதுகுறித்து, பிரதமரைத் தவிர இந்திய ராணுவத்தை அனைவரும் நம்புகிறோம். மோடியின் கோழைத்தனம்தான் சீனா நமது நிலத்தை கையகப்படுத்த துணிந்ததற்கு காரணம். இந்த சூழல் தொடர்வதற்கு மோடியின் பொய்கள் உதவியாக இருக்கிறது என ட்வீட் செய்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி, சீனா நமது பகுதியை ஆக்கிரமித்துள்ளது. ஆனால், இந்திய பிரதமருக்கு சீனா பற்றி வாய்திறக்க தைரியமில்லை. என்ன மாதிரியான தலைவர் இவர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
74ஆவது சுதந்திர தின விழா அன்று சோனியா காந்தியும் இதுகுறித்து கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.