லடாக் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவிவருகிறது. இதன் காரணமாக இருநாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு குவித்துள்ளன.
இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவத்தினருக்கும் இடையே எழுந்த கைக்கலப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள வேளையில்,பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.