தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெற்றோரின் படங்களைப் பரப்புரையில் பயன்படுத்த வெட்கப்படும் தேஜஷ்வி! - ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஷ்வி பிரசாத் யாதவ்

பாட்னா : பிகாரின் முன்னாள் முதலமைச்சர்களான லாலு, ராப்ரி தேவி ஆகியோரது படங்களை பரப்புரையில் பயன்படுத்த தேஜஷ்வி ஏன் வெட்கப்படுகிறாரென மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வியெழுப்பியுள்ளார்.

பெற்றோரின் படங்களை பரப்புரையில் பயன்படுத்த தேஜஷ்வி வெட்கப்படுகிறார் !
பெற்றோரின் படங்களை பரப்புரையில் பயன்படுத்த தேஜஷ்வி வெட்கப்படுகிறார் !

By

Published : Oct 27, 2020, 3:12 PM IST

பிகார் மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை களம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மகா கூட்டணியும், முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான பாஜக என்.டி.ஏ. கூட்டணியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிட்டு வருகின்றன.

முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பாஜகவின் மூத்தத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில், நேற்று (அக். 26) புர்னியா சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் மத்திய சட்டம், நீதி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய ரவிசங்கர் பிரசாத், "ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஷ்வி பிரசாத் யாதவ் தனது கட்சியின் பரப்புரை விளம்பரங்களில், மேடைகளில் தனது பெற்றோரும், பிகாரின் முன்னாள் முதலமைச்சர்களுமான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோரின் படங்களை ஏன் பயன்படுத்துவதில்லை?

தேஜஷ்வின் பெற்றோர் பிகாரை 15 ஆண்டுகள் முதலமைச்சர்களாக ஆட்சி செய்தவர்கள். 'புதிய பிகார்' சுவரொட்டிகளில் அவர்கள் இருவரது படங்களைப் பயன்படுத்த எதற்கு வெட்கப்படுகிறார்?

ஏனென்றால், அவர்களின் புகைப்படங்களைப் பார்த்தால், புர்னியாவின் பட்டா பஜார் பகுதியில் நடந்த கடத்தல்கள் குறித்து மக்கள் நிச்சயம் கேள்விக் கேட்பார்கள். இந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் அந்தச் சம்பவங்களை நினைவுகூர்வார்கள்.

மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அந்த சட்டவிரோத நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும்.

நீங்கள் யாரை ஆட்சியில் கொண்டுவர விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும். என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைத்தால் இங்கு வர்த்தகத்தில் ஏற்றம் வரும். வாக்காளர்கள் சரியானதைச் செய்யாவிட்டால் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்பாடுகள் மீண்டும் தொடரும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details