தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உணவுப் பொருள்களின் விலை உயர்வு! - உச்சத்தில் மொத்த உற்பத்தி பணவீக்கம் - Wholesale prices based inflation rose in November

மாதாந்திர மொத்த விலைக் குறியீட்டை (WPI) அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டின்படி, பணவீக்கமானது ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 4.47 சதவிகிதமாக இருந்ததாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

Wholesale prices based inflation rose in November
Wholesale prices based inflation rose in November

By

Published : Dec 16, 2019, 4:04 PM IST

2018ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத இறுதியில், மொத்த விலை பணவீக்கமானது 0.33 சதவிகிதமாக இருந்துவந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் அக்டோபர் மாதத்தில் 0.16 சதவிகிதமாகக் குறைந்திருந்தது.

இந்திய உணவுப் பொருள்கள் சாராத பொருள்களின் விலை குறைவும், உற்பத்திச் சார்ந்த பொருள்களின் விலை குறைவும், இந்திய நாட்டின் மொத்த விலை, பணவீக்கம் குறைவதற்கான முக்கியமான காரணமாக இருந்து வந்துள்ளதாக மத்திய அரசின், புள்ளிவிவர தரவுகள் வெளிப்படையாகத் தெரிவித்தன.

மத்திய வர்த்தகத் துறை சார்ந்த மாதாந்திர மொத்த விலை பணவீக்க குறியீட்டை முக்கியமான அடிப்படையாகக் கொண்டுதான், ஒவ்வொரு ஆண்டின் பணவீக்கமானது கணக்கிடப்படுகின்றது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டில், 5.54 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் உணவுப் பொருள்களுக்கான, மொத்த விலை உயர்வு விகிதமானது, நடப்பு நிதியாண்டில், கணக்கில் எடுத்துக்கொண்ட மதிப்பீட்டு மாதத்தில், 1.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

வரும் 18ஆம் தேதி கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் - வரிகளை உயர்த்த மத்திய அரசு முடிவு

மேலும், உணவு சாராத மற்ற பொருள்களின் விலை உயர்வு விகிதம், 0.6 சதவிகிதம் உயர்வைச் சந்தித்துள்ளதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் தற்போது தெரிவித்திருக்கின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களின் மொத்த விலை பணவீக்கமானது, அக்டோபர் மாதத்தில் மட்டும் மைனஸ் 0.84 சதவிகிதமாக இருக்கின்றது என்று புள்ளிவிவர தரவுகள் தெரிவித்திருக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details