சீனாவில் 'கரோனா வைரஸ்' என்னும் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த நோய் பரவி வருவதால் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த கொடூர நோய்க்கு 'கோவிட்-19' என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமான பெயரை சூட்டியுள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டட்ரோஸ் அதான்நோம் கிப்ரெய்சஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா, வைரஸ், டிசீஸ் ஆகிய பெயர்களை இணைத்து 'கோவிட்-19' என்ற புது சொல்லை உருவாக்கியுள்ளோம். தவறான சொற்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க இந்த பெயரை நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்றார்.