தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கரோனா பரிசோதனையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த வேண்டாம்' - உலக சுகாதார அமைப்பு - உலக சுகாதார அமைப்பு

கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

who
who

By

Published : Jul 5, 2020, 4:06 PM IST

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் கரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் மும்முரமாக உள்ளனர். இதற்கிடையே, கரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தலாம் என இந்தியாவும், அமெரிக்காவும் பரிந்துரைத்தன. இதனைத் தொடர்ந்து, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியாவிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஆனால், எதிர்பாராத வகையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், பல பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் எச்சரித்தனர்.

இந்நிலையில், கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினையும், ஹெச்.ஐ.வி மருந்தான லோபினாவிர் / ரிடோனாவிரையும் கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு அளித்து பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதில் சிறப்பாக செயல்படவில்லை என்பது இடைக்கால சோதனைகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. நோய்த்தடுப்பு மருந்துகளாக இதனைப் பயன்படுத்தும் ஆய்வுகளை இந்த முடிவு பாதிக்காது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details