கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது சோதனையான காலகட்டத்தை சந்தித்துவருகின்றன. 150-க்கும் மேற்பட்ட நாடுகளில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டாயிரத்து 200 பேர் வரை இந்தக் கொடிய வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். 82 ஆயிரம் மக்கள் கரோனா பாதிப்பிலிருந்த மீண்டுவந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை 25 வெளிநாட்டினர் உள்பட 169 பேருக்கு கரோனா தொற்று காணப்படுகிறது. கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதுமட்டுமின்றி வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 36 நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.