கோவிட்-19 பரவலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தொடர்ந்து குறைந்துவருகிறது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் கரோனா குறைந்துவருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அடுத்துவரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருந்தால் கரோனா அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், "சமீபத்திய வாரங்களில் கரோனா பரவல் குறைந்துள்ளதை பார்த்து நாம் மனநிறைவு அடையக்கூடாது.