தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புல்வாமா தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு நாள் - ராகுல் காந்தி எழுப்பும் முக்கியமான கேள்விகள்! - ராகுல் காந்தி எழுப்பும் முக்கியமான கேள்விகள்

டெல்லி : புல்வாமா தாக்குதலின் ஓராண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுவதை அடுத்து, ராகுல் காந்தி இதுகுறித்த அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Feb 14, 2020, 5:17 PM IST

கடந்த ஆண்டு, பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து சில கேள்விகளை முன்வைக்கிறேன்.,

  • இந்த தாக்குதலால் பலன் அடைந்தவர்கள் யார்?
  • தாக்குதல் குறித்து நடைபெற்ற விசாரணையின் முடிவுகள் என்ன?
  • தாக்குதலுக்குக் காரணமான பாதுகாப்பு குளறுபடிகளுக்கு பாஜக அரசு ஏன் இன்னும் பொறுப்பேற்கவில்லை?" எனக் கேள்விகளை எழுப்பி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'மிகவும் வேதனையடைந்தேன்' - அதிருப்தியடைந்த மம்தா

ABOUT THE AUTHOR

...view details