ஒரு மாத அரசியல் குளறுபடிகளுக்குப் பின், மகாராஷ்டிராவின் 18ஆவது முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை 6:40 மணிக்கு மும்பையிலுள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் பதவியேற்கவுள்ளார்.
உத்தவ் தாக்கரேவுடன் இன்று பதவியேற்கும் இரு அமைச்சர்கள் யார்? - உத்தவ் தாக்கரே பதவியேற்பு
மும்பை: உத்தவ் தாக்கரேவின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த இரு தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
உத்தவ் தாக்கேரவுடன் இன்று பதவியேற்கும் இரு அமைச்சர்கள் யார்?
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், அக்கட்சியின் இரண்டு தலைவர்கள் அமைச்சர்களாக இன்று பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் புஜ்பால், ஜெயந்த் பட்டில் ஆகிய இருவரும் உத்தவ் தாக்கரேவுடன் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: 'தூங்கி விழுந்த உறுப்பினர்கள்!' - நிதியமைச்சரின் அடேடே விளக்கம்